“அக்தரை வம்படியாக வார்த்தை போருக்கு இழுத்தேன்” நினைவுகளை பகிர்ந்த மேத்யூ ஹைடன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தரை வம்படியாக வார்த்தை போருக்கு இழுத்த நினைவுகளை அண்மையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் பகிர்ந்திருந்தார். 


Advertisement

image

2002இல் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷோயிப் அக்தருடனான ஸ்லெட்ஜிங் அத்தியாயத்தை அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

“58 டிகிரி வெப்பத்தின் கீழ் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஆட்டத்தின் நடுவே ‘உன்னை நான் இன்று கொல்லப் போகிறேன்’ என்றார் அக்தர். 

‘அந்த சவாலை ஏற்கிறேன்’ என நான் சொன்னேன். அவரை உசுப்பேற்ற ‘நீ ஒரு இரண்டாம் தர ‘B கிரேட்’ நடிகர்’ என்று சொன்னேன். 

அந்த வார்த்தைகளை அக்தர் கேட்டதும் கோவத்தில் பொங்கிவிட்டார். அதன் பின்னர் பந்து வீச வரும் போதெல்லாம் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். 


Advertisement

image

அதனால் அவர் பந்து வீச வரும் போதெல்லாம் பேட்டிங் பொசிஷனில் இருந்து நகர்ந்து விடுவேன். 

இது தொடர்பாக என்ன பிரச்சனை என அந்த போட்டியில் நடுவராக இருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கட் கேட்டார். 

‘நான் விளையாட்டில் என்னால் முடிந்த அனைத்தையும் தருகிறேன், எனக்கு கிடைக்கும் ரன்களுக்கு நான் தகுதியானவன். ஆனால் விளையாட்டின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு பந்துவீச வரும் போதெல்லாம் என்னை திட்ட முடியாது என்று நடுவர் மூலமாக அவருக்கு பதில் கொடுத்தேன்” என்றார் அவர்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement