பெண்ணை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் சங்கர் - பாரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ரம்யா, ராஜலட்சுமி என 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதேபோன்று வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் சாந்தகுமார் - உமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சாந்தகுமார் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ரம்யாவை அழைத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், அவரை மீட்டு தரும்படியும் உமா வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிகண்டன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். காவலர் மணிகண்டனுக்கும் உமாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காரில் உமாவுடன் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் காந்திநகர் பகுதிக்கு சென்ற காவலர் மணிகண்டன், வீட்டில் இருந்த ரம்யாவின் சகோதரி ராஜேஸ்வரி மற்றும் அவரது தாயார் பாரதி ஆகியோரை அவதூறாக பேசியதுடன், மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுதொடர்பாக காவலர் மணிகண்டன் மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனாகால நிதி - அரசாணை வெளியீடு
பீகார்: உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக்கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட அவலம்
சில்லறை கேட்டு முதியவரை தாக்கும் நடத்துனர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
தருமபுரி: மர்மமான முறையில் உயிரிழந்த மக்னா யானை... வனத்துறையினர் விசாரணை!
கூச்பெஹார் துப்பாக்கிச்சூடு; மேற்கு வங்க மக்கள் கேட்டால் ராஜினாமா செய்வேன்: அமித் ஷா