ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சிறுத்தை - காட்டெருமை : சோகத்தில் முடிந்த சண்டை!!

Fighting-wildlife----Nilgiris-District-Forest-Department-Investigation----

நீலகிரி மாவட்டம் குன்னூரில், சிறுத்தையும் காட்டெருமையும் சண்டையிட்டு இரண்டும் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

image

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அண்மை காலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே வன விலங்குகள் இயற்கையாகவும், சில விபத்தாலும் உயிர் இழந்து வருகின்றன. இதில் குறிப்பாக காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் கிராமத்திற்குள் உலா வரும் சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

இந்நிலையில் குன்னூர் சின்ன கரும்பாலம் அருகேயுள்ள அறையட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தேயிலை தோட்டத்தில் சிறுத்தையும் காட்டெருமையும் மோதி கொண்ட சம்பவத்தில் அதே இடத்திலேயே இரண்டும் பலியானது. வழக்கம்போல் தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் பணிக்காக செல்லும் போது சிறுத்தை மற்றும் காட்டெருமை உயிரிழந்ததை குறித்து வனத்துறையினரிடம் தகவல் அளித்தார்.

image

வன சரகர் சசிகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமை மற்றும் சிறுத்தை உயிரிழந்ததை ஆராய்ந்த போது காட்டெருமைக்கு அதிகமாக காயங்களும் சிறுத்தைக்கு குறைவாக காயங்களும் இருந்ததை கண்டறிந்தனர். இறந்த இரண்டும் விலங்கும் ஆண் என்பதால் ஆவேசமாக சண்டையிட்டதில் இரண்டும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement