சினிமாத் துறையில் 42 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ராதிகா. இவர் சினிமாத்துறையில் 42 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் மூலம் சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நகரும் அப்படத்திலேயே, அதிக கவனம் பெற்றார் ராதிகா.


Advertisement

 image

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10 தேதி தன்னுடைய காலடியை பதிவு செய்த ராதிகா, தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, நான் இவ்வளவு தூரம் பயணித்து வருவென் என நினைத்து பார்க்கவில்லை.


Advertisement

image

ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்தேன். அது தான் இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கு காரணம். இது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் அளித்துள்ளது. அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, வானம் கொட்டட்டும் படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அவர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் சில படங்களிலும் ராதிகா நடித்து வருகிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement