மூணாறு நிலச்சரிவில் சிக்கிய மேலும் 4 பேர் உடல் மீட்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மூணாறு நிலச்சரிவில் புதையுண்டவர்களில் மேலும் 4 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. 


Advertisement

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி என்ற இடத்தில், கடந்த வியாழக்கிழமை இரவு, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு இருக்கும் டீ எஸ்ட்டேட்டில் வேலை செய்துவந்த தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் மண்ணில் புதைந்தன. image

தேசிய பேரிடர் மீட்புக் குழு, கேரள தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை, மேலும், சுற்றியுள்ள டீ எஸ்ட்டேட்டைச் சேர்ந்த நபர்கள் என சுமார் 150 பேர் கடந்த நான்கு நாள்களாக, மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement