''பந்து சிக்ஸருக்கு போனாலும் கைத்தட்டி பாராட்டுவார்'' - தோனி குறித்து பேசிய முரளிதரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நன்றாக வீசிய பந்து சிக்ஸருக்கு பறந்தாலும் தோனி பந்துவீச்சாளரை கைத்தட்டி பாராட்டுவார் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்


Advertisement

இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கேப்டன்சி குறித்து அவர் பேசியுள்ளார். அதில், தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று என்னவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பீல்டிங் செட் செய்வதற்கு பந்துவீச்சாளர்களை அனுமதிப்பார்.

image


Advertisement

ஒருவேளை அதுசரியில்லை என்றால், நான் பீல்டிங்கை மாத்தவா என அவரே மாத்துவார். சில நேரம் நல்ல பந்து கூட சிக்ஸருக்கு பறக்கும். அப்போதும் கூட அவர் கைத்தட்டி பந்துவீச்சாளரை பாராட்டுவார். ’’சிக்ஸர் போனது என்பது முக்கியம் இல்லை. நீங்கள் வீசியது நல்ல பந்துதான். அதனை சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு பேட்ஸ்மேன் திறமையான ஆள்’’ என்று கூறுவார்.

தோனி எப்போதும் நிதானமாகவே இருப்பார். அது நல்ல கேப்டனுக்கான முக்கியத் தேவை. எப்போதும் சீனியர் வீரர்களில் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார் என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement