[X] Close

நாட்டில் பலராலும் பேசப்பட்ட பூலான் தேவியின் பிறந்தநாள் இன்று

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாட்டில் பலராலும் பேசப்பட்ட பூலான்தேவியின் பிறந்தநாள் இன்று.


Advertisement

image

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 ஆம்தேதி  பிறந்த பூலான் தேவிக்கு 4 சகோதரிகள் இருந்தனர்.  இவருக்கு 11 வயதிலேயே அதிக வயதுடைய ஆணுடன் திருமணம் செய்து வைத்தனர், ஆனால் அவரது மணவாழ்க்கை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு உறவினர்கள், காவல்துறையினர் உட்பட பலராலும் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார், பின்னாட்களில் கொள்ளைக்காரியாக மாறினார் பூலான் தேவி. கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்று சம்பல் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய கொள்ளைக்கூட்டத்தலைவியானார் இவர். அதன்பிறகு தன்னை பாலியல் துன்புறுத்திய பலரை தொடர்ந்து கொலை செய்தார்.


Advertisement

image

இந்த நிலையில்தான் 1980 ல் பூலான் தேவியின் காதலன் விக்ரம் மல்லாவை கொன்றதோடு,  பூலான்தேவியையும் பெஹ்மாய் என்ற இடத்துக்கு சிறை பிடித்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர் மற்றொரு கொள்ளைக்கூட்டத்தினர். இதற்கு பழிவாங்கும் விதமாக ஓராண்டு கழித்து பெஹ்மாய்க்கு சென்று 22 பேரை சுட்டுக்கொன்றார், இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. காவல்துறை அவரை தீவிரமாக தேடியபோதும் பிடிபடாமல் பலரை கடத்தி கொலை செய்தார் பூலான் தேவி. 1983 ஆம் ஆண்டு காவல்துறையிடம் சரணடைந்த அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த அவர்  1996 மற்றும் 99 தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார், 2001 ஆம் ஆண்டு தனது 37 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார் பூலான் தேவி

loading...

Advertisement

Advertisement

Advertisement