காரில் அடிபட்டு இழுத்துச் செல்லப்பட்ட பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மங்களூருவில் உள்ள கத்ரி காம்ப்லா அருகே ஒரு சந்திப்பில் கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் 22 வயது பெண் பலத்த காயமடைந்தார். அங்கிருந்த உள்ளூர் கடை சிசிடிவி கேமாராவில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.


Advertisement

வாணிஸ்ரீ என்ற பெண் தனது ஸ்கூட்டரில் காலை 9 மணியளவில் அட்டாவரை என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கத்ரி காம்ப்லா என்ற சந்திப்பிற்கு அருகே நான்கு வழி சந்தியில் வந்தபோது, ஹூண்டாய் கார், இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. அந்த பெண் கீழே விழுந்தும், அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டு, சிக்னல் செய்தபோதும் கார் டிரைவர் நிறுத்தவில்லை. இதனால் அந்த பெண் கார் மூலம் தரையில் இழுத்துக்கொண்டே போயியுள்ளார். அதன்பின் திடீரென ப்ரேக் போட்டதும் அருகில் இருந்தவர்கள் அந்த காரை சூழ்ந்து கொண்டனர்.

image
தற்செயலாக மங்களூரு எம்.எல்.ஏவை அழைத்துச்சென்ற போலீஸார் அங்கு இருந்ததால் விபத்திற்குள்ளான பெண்ணை மீட்டுள்ளனர்.


Advertisement

வாணிஸ்ரீக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காரை ஓட்டிவந்த ரவிக்குமார் கேஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வேண்டுமென்றே அந்த பெண்மீது விடவில்லை எனவும், அதிர்ச்சியில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார். ரவிகுமாரும் மருத்துவமனைக்குச் சென்று வாணிஸ்ரீக்கு உதவியுள்ளார்.

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement