கனிமொழி எழுப்பிய இந்தி புகார் விவகாரம் : சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விமான நிலைய சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் தன்னிடம் “இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா” என்று கேள்வியெழுப்பினார் என கனிமொழி எம்.பி கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

image

மூத்த பத்திரிகையாளர் கமலா தியாகராஜன் தனது பதிவில் “இந்தியா என்பது டெல்லியை சுற்றி மட்டும் இல்லை, நமது மொழிகளுக்கும் இங்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் “மத்திய அரசு பதவிகளில் உள்ள இந்தி அல்லாத மொழி பேசும் நபர்கள் விரைவாக செயல்பட்டு, இந்தி மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மத்திய அரசு பதவிகளிலுள்ள இந்தி பேசும் நபர்கள் ஏன் விரைவாக ஆங்கிலம் கற்க முடியாது?. இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதில் மத்திய அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளும் தேவை என்பதை வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல தென்னிந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கனிமொழியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement