[X] Close

உங்க குழந்தை தூங்கவில்லையா? இதுகூட காரணமாக இருக்கலாம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குழந்தை பிறந்தாலே ஒரு பெரிய சந்தோஷமே வீட்டிற்குள் வந்துவிடும். கூடவே அதிக கவனமும் பராமரிப்பும் அதற்கு தேவைப்படும். குறிப்பாக நம்முடைய நேரத்திற்கு ஏற்றார்போல் குழந்தை தூங்கி எழாது. 8 மணி நேர தொடர் தூக்கம் என்பதை குழந்தைகளிடம் எதிர்பார்க்க முடியாது. இடையிடையே தூங்கி எழும். சில நேரங்களில் குழந்தை தூங்காமல் அழும். சில பொதுவான காரணங்களால் குழந்தை தூங்காமல் இருக்கும்.


Advertisement

image

நம்முடைய 24 மணிநேர கடிகாரம் குழந்தைக்கு கிடையாது
பிறந்த குழந்தை 18 மணிநேரம் கூட தூங்கும் என நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு பகல் இரவு என்ற வித்தியாசமெல்லாம் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள 12 வாரங்களுக்கு மேல் ஆகலாம். மெதுவாக இரவில் தூங்குவதைப் பழக்கப்படுத்தலாம். அதற்கு இயற்கை வெளிச்சத்தை அனுபவிக்க சிறிது நேரம் வெளியே அழைத்துச் செல்லலாம்.


Advertisement

image

குழந்தைக்கு பசிக்கும்
தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்த குழந்தைகளுக்குத் தெரியாது. அதன் குரலில் ஏற்படும் மாற்றங்கள், அழுகை மற்றும் கூச்சலை வைத்துத்தான் என்ன தேவை ஏன் தூங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். உங்கள் குழந்தை தூங்க மறுத்தால் பசியோ தாகமோ ஏற்பட்டிருக்கலாம். பிறந்த குழந்தைக்கு அடிக்கடி பாலூட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

image


Advertisement

குழந்தைக்கு அசௌகரியமாக இருக்கும்
சில நேரங்களில் உடலில் ஏதேனும் அழுத்திக் கொண்டிருந்தாலோ, சூடாகவோ அல்லது குளிராகவோ இருந்தாலோ குழந்தை கத்தி அழுக ஆரம்பித்துவிடும். எவ்வளவுதான் தூங்கவைக்க முயற்சித்தாலும் முடியாது. எனவே உணவு கொடுத்த பின்னும் கத்திக்கொண்டே இருந்தால் டயபர் மிகவும் இறுக்கமாக இருக்கிறதா? அல்லது சுத்தமில்லாமல் இருக்கிறதா? என்பதை சரியாக கவனிக்கவும்.

image

உங்களுடன் நேரம் செலவிட ஆசைப்படும்
சில நேரங்களில் குழந்தைகள் தூங்குவதற்கு தாயின் அரவணைப்புத் தேவைப்படும். தாயின் மார்பில் சாய்ந்து உறங்குவது அல்லது தொட்டிலில் வைத்து ஆட்டுவது போன்றவற்றை சில நேரம் எதிர்பார்க்கும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement