100 கிலோமீட்டர் பயணம்: மாணவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் வழங்கும் தலைமையாசிரியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்காத காரணத்தால், 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தன் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் சென்று புத்தகங்கள் மற்றும் பையினை வழங்கியுள்ளார் கரூர் பரமத்தி அருகிலுள்ள தொட்டியப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கே.மூர்த்தி.


Advertisement

image

 “ஒரு பள்ளி, ஒரு ஆசிரியர், ஒரு மாணவர், ஒரு புத்தகம், ஒரு பேனா மூலமாக மாற்றத்தை உருவாக்கமுடியும்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப செயல்படும் தலைமையாசிரியர் மூர்த்தி பேசும்போது “ எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டு 67 மாணவர்கள் படித்து வந்தனர், அவர்களில் 10 பேர் தேர்ச்சி பெற்று சென்றுவிட்டதால் இப்போது 57 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பைகள் அரசால் வழங்கப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களின்  நலன் கருதி ஒவ்வொரு வீட்டிற்கும் நானே சென்று புத்தகங்களை வழங்க முடிவு செய்தேன். அதன்படி 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து 13 கிராமங்களிலுள்ள 57 மாணவர்களுக்கு புத்தகங்கள், பை மற்றும் எழுதுபொருட்களை வழங்கினேன்.


Advertisement

அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மாணவர்களை அழைத்து மரத்தடியில் அமரவைத்து முதல் பாடத்தை சொல்லிக்கொடுத்தேன். மேலும் கல்வி தொலைக்காட்சியில் பாடநிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது பற்றியும் கூறினேன். ஆண்ட்ராய்டு போன் வைத்துள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வாட்சப் வாயிலாக பாடம் நடத்துதல் பற்றியும் சொல்லிக்கொடுத்து வருகிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

loading...

Advertisement

Advertisement

Advertisement