மின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது  சிறுவன் மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் 


Advertisement

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இவர் இன்று காலை அவரது வீட்டு அருகாமையில் இருந்த மின் கம்பத்தை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image


Advertisement

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது “ கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசிக்கொண்டிருந்ததால், மின் இணைப்பு கம்பிகள்
சார்ட் ஆகி மின்கசிவு ஏற்பட்டது. இரும்பு கம்பம் என்பதால் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டான். மின் வாரியத்தினர் மின் கம்பங்களை மாதத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்தால் இது போன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் விரைவில் இதனை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

loading...

Advertisement

Advertisement

Advertisement