கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி - முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். 


Advertisement

image

‘நான் தங்கவைக்கப்பட்டுள்ள வார்டில் கழிவறை வசதி சரிவர இல்லை’ என சமூக வலைத்தளத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பதிவவிட்டிருந்தார் நாகராஜன். 


Advertisement

இந்நிலையில் புதுச்சேரி மாநில சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா நோயாளி நாகராஜனை இன்று அவர் தங்கியுள்ள வார்டுக்கு சென்று, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

image

பாதுகாப்பு கவச உடைகளுடன் அமைச்சர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தங்கியிருந்த வார்டுக்குள் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

image

“அமைச்சர் என்னை சந்தித்து ‘உங்களுக்கு ஏதேனும் குறை இருக்கிறதா?’ என கேட்டார். நான் சொன்ன குறைகளை நீங்கள் சரி செய்து விட்டீர்கள் என நன்றி சொன்னேன். பின்னர் மருத்துவமனையில் இருந்த மற்ற கொரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களது குறையையும் கேட்டறிந்தார். அமைச்சரே என்னை நேரில் வந்து சந்தித்தது நம்பிக்கை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார் நாகராஜன். 

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மருத்துவனை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.

 

 



loading...

Advertisement

Advertisement

Advertisement