நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை - ஜெகத்ரட்சகன் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை என  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் புதியதலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


Advertisement

திமுகவின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ வான கு.க. செல்வம் திடீரென டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து தற்காலிக  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

image


Advertisement

திமுக மீது அதிருப்தியில் உள்ள செல்வம் விரைவில் பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி மாறப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள அவர் நான் அதிருப்தியிலும் இல்லை பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை எனக் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தேவையின்றி இப்படி வதந்தி பரப்புவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது எனவும் புதியதலைமுறைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement