2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர். அத்துடன் கொரோனா பாதிப்பில் வீட்டில் இருந்த வீரர்கள், இப்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் நிலவரம் குறித்தும், பலம் குறித்தும் காணலாம். 2020-ஆம் ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தின் போது, ஏற்கெனவே தங்கள் அணியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ரியான் பாராக், ஷாஷாங் சிங், ஸ்ரேயாஸ் கோபால், மஹிபால் லாம்ரோர், வருண் ஆரோன் மற்றும் மனன் வோரா ஆகியோரை மறுஒப்பந்தம் செய்துகொண்டனர். அத்துடன் அன்கிட் ராஜ்பூட், மயாங்க் மார்கண்டே, ராகுல் திவாடியா ஆகியோரை மீண்டும் வர்த்தகம் செய்தனர்.
இதுதவிர ராபின் உத்தப்பா (3 கோடி), ஜெயதேவ் உனாட்கட் (3 கோடி), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (2.4 கோடி), டேவிட் மில்லர், ஓஷானே தாமஸ், ஆண்ட்ரிவ் டை மற்றும் டாம் குரான் உள்ளிட்டோரை ஏலத்தில் எடுத்தனர். அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே டெல்லி அணியால் வாங்கப்பட்டார். தற்போது ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்டவர்கள், ஏற்கெனவே அணியில் உள்ளவர்கள் என மொத்தமாக சேர்த்து ராஜஸ்தான் அணியில் 25 வீரர்கள் உள்ளனர். இதில் சிறந்த வீரர்கள் 11 பேர் கொண்ட அணியை உருவாக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆலோசித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல் 11-ல் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ராபின் உத்தப்பா அல்லது யாஷஸ்வி, ஷானே தாமஸ், டாம் குரான், டேவிட் மில்லர், ஆண்ட்ரிவ் டை அல்லது வருண் ஆரோன் ஆகியோர் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட வீரர்களில் ஸ்மித் (பேட்டிங்), பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்), பட்லர் (பேட்டிங்) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (பவுலிங்) ஆகியோர் சர்வேத அளவில் கலக்கிக்கொண்டு இருக்கின்றனர். எனவே இவர்கள் 4 பேரின் ஆட்டமும் ஃபர்ஸ்ட் கிளாசில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் சஞ்சு சாம்சன் மற்றும் அனுபவ வீரர் உத்தப்பா ஆகியோரின் பேட்டிங்கும் பலமாக அமையும். உத்தப்பாவிற்கு பதிலாக 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கலக்கிய யாஷஸ்வியை சேர்க்கவும் வாய்ப்புண்டு. அவரது ஆட்டமும் சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பவுலிங்கை பொருத்தவரையில் ஒஷானே தாமஸ், அனுபவ வீர ஆண்ட்ரிவ் டை மற்றும் டாம் குரான் பலமாக அமையலாம். இதுதவிர கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் கலக்கிய ஸ்ரேயாஸ் கோபால் கூடுதல் பலமாக இருப்பார். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2008 ஐபிஎல் கோப்பை வென்ற அணி என்பதால், இந்தாண்டும் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி