திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுவர் விளம்பரம்.. தார்பூசி அழித்த மர்ம நபர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா, வரும் 17-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வாழ்த்து சுவர் விளம்பரம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த சுவர் விளம்பரம், திருமருகல் பூந்தோட்டம் - காரைக்கால் இடையே கிடாமங்கலம் குறுக்கு சாலை பேருந்து நிறுத்தத்தில் எழுதப்பட்டிருந்தது.


Advertisement

image

இந்நிலையில் இந்த சுவர் விளம்பரத்தை  அடையாளம் தெரியாத நபர்கள் தார்பூசி அழித்துள்ளனர். இதனையறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  திரண்டனர். இதனையடுத்து அவர்கள் திருமருகல் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.


Advertisement

அப்போது தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் வாழ்த்து சுவர் விளம்பரத்தை தார்பூசி அழித்த  நபர்களை  காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

image

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தார்பூசி அழித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக திட்டச்சேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement