அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவா?: விளக்கம் கொடுத்த உள்துறை அமைச்சகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான மனோஜ் திவாரி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.  அந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 


Advertisement

image

இதுவரை அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவில்லை என ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில், அவர் நலம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement