பொள்ளாச்சியில் மதிய உணவுடன் இலவச கல்வி; அசத்தும் பழங்குடி இளைஞர்!

Free-education-with-lunch-in-Pollach--Awesome-tribal-youth-

பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி பயின்று வருகின்றனர்.


Advertisement

இந்த சூழலில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. டிவி, ஸ்மார்ட் போன் இல்லாததால் பழங்குடி இன மாணவர்களுக்கு இந்த ஆண்டின் பள்ளிக்கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும் இந்த மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடிவதில்லை.

image


Advertisement

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ இறுதி ஆண்டு பயிலும் மாணவர் கனகசபாபதி அங்குள்ள ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன் வீட்டில் கல்வி கற்பித்து வருகிறார். மேலும் அங்கு வரும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு மாணவர்களுக்கு அங்கேயே மத்திய உணவு தயாரித்தும் வழங்கி வருகிறார்.

image

இதுகுறித்து கனகசபாபதி கூறுகையில், மலைவாழ் மாணவர்கள் நன்கு படித்து, அரசு பொறுப்புகளில் பணியமர வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார். மேலும் அதே பகுதியில் கல்வி பயின்று சில மாணவர்கள் பொருளாதார பிரச்சனையால் தங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை என்றும் இதற்கு அரசு உதவி கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement