[X] Close >

கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் கேன் வில்லியம்சனின் பிறந்தநாள் இன்று!

Happy-Birthday-Kane-Williamson-Cricket-s-most-loved--gentleman--turns-30-today

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


Advertisement

கிரிக்கெட் உலகில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றவர் கேன் வில்லியம்சன் என்றால் அது மிகையல்ல. கேன் வில்லியம்சன் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டிதான்.

பவுண்டரி கணக்குகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதாக அறிவித்ததும், கேமராக்கள் கேன் வில்லியம்சனின் ரியாக்ஷனை படம்பிடித்தன. அப்போது அவர் தோல்வி வலியை மறைத்து புன்முறுவலுடன் களத்தில் கூலாக நின்ற காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.


Advertisement

image

தோல்விக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கேன் வில்லியம்சன் கூறும்போது, ‘’ஏதாவது ஒரு அணிதான் வெற்றி பெற முடியும். அது நாங்கள் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் மிக சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதி பெற்றவர்கள்" எனக் கூறியது கேன் வில்லியம்சனுக்கு கிரிக்கெட் மீதிருந்த மரியாதையையும் பண்பையும் பறைசாற்றியது.

இன்று 30-வது பிறந்தநாளை கொண்டாடும் கேன் வில்லியம்சனுக்கு  சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close