கொரோனா பரவல் அக்டோபர் வரை குறைய வாய்ப்பில்லை- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகமே கேட்கக்கூடிய ஒரே கேள்வி இதுதான். எப்போது கொரோனா முடிவுக்கு வரும்? இந்தியாவைப் பொருத்தவரையில் அக்டோபர் மாதம் வரையில் அது முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

கொரோனா பாதிப்பு மற்றும் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றிய இணையவழி கருத்தரங்கை அண்மையில் டெக்கான் ஹெரால்டு பத்திரிகை நடத்தியுள்ளது. இந்திய அளவில் புகழ்பெற்ற கிரிதர்பாபு, சசிகுமார் கணேசன் உள்ளிட்ட சில முக்கிய மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கருத்தரங்கில் கொரோனா தொடர்பான மருத்துவ புள்ளிவிவரங்கள் அலசப்பட்டன.

image


Advertisement

கருத்தரங்கில் பேசிய மருத்துவர்கள், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் டிசம்பரில் உச்சத்தை அடைந்து மெல்ல குறையத் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகக் குறைவுதான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement