மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் பகத் பாசிலின் 38-வது பிறந்த தினம் இன்று. ஆகஸ்ட் 8 1982 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார்.
அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடவிருந்த சூழலில் நேற்று துபாயிலிருந்து வந்த விமானம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிங்கும்போது விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், பகத் பாசில் பிறந்தநாளான இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உயிரிழந்த விமானி “தீபக் வசந்த் சாத்தே அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்பத்தை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விமானம் ஓட்டுவதில் திறமையான விமானியான சாத்தே விமானப்படையின் விங் காமாண்டராகவும், பெங்களூரு ஏரோநாடிகல் விமான நிறுவனத்தில் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார். போர் விமானங்களை இயக்குவதிலும் அனுபவம் வாய்ந்தவர். பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார்.
இந்நிலையில் பகத் பாசிலின் மனைவி நஸ்ரியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த வாழ்த்தையும் போடவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவசர உதவி எண்களை பகிர்ந்துகொண்டுள்ளார்!
Loading More post
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஒழுகும் ஓட்டை வீட்டில் தொடங்கி ஐ.ஐ.எம் - ராஞ்சி வரை... உத்வேகம் தரும் ரஞ்சித்தின் பயணம்!
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!