சென்னை: ஸ்விக்கி டெலிவரிபோல கஞ்சா விற்ற இளம்பெண் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஸ்விக்கியில் டெலிவரி வேலை செய்வதுபோல் கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்த பெண்ணை கிண்டி போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த வனிதா (32) என்பவர் கோயம்பேட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, கிண்டி பகுதியில் ஸ்விக்கி டெலிவரி வேலை செய்வதுபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனிதாவை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.

image


Advertisement

வனிதாவிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், இருசக்கர வாகனம், 500 ரூபாய் பணம் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

loading...
Related Tags : Swiggyகஞ்சாசென்னை

Advertisement

Advertisement

Advertisement