ஆவடி அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜகவை சேர்ந்தவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த  நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (45) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார்.


Advertisement

imageபின்னர், அவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

loading...

Advertisement

Advertisement

Advertisement