உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது ரஷ்யா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


Advertisement

உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டறிய உலக நாடுகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்துள்ளது.

image


Advertisement

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் முரஸ்கோ பேசியபோது " உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான அனைத்துச் செலவுகளும் பட்ஜெட்டில் அடங்கும்" என்றார்.

image

மேலும் " இந்தத் தருணத்தில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்" என்றார் முரஸ்கோ.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement