‘அய்யோ அடித்து கொடுமை படுத்துகிறார்களே’ சீக்கியரின் தலைமுடியை பிடித்து இழுத்த ம.பி போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பிரேதச மாநிலத்தில் சீக்கியர் ஒருவரை மக்கள் மத்தியில் அவரது தலைமுடியை பிடித்து போலீசார் இழுத்து செல்லும் வீடியோ காட்சி பலத்த சர்ச்சையை தூண்டியுள்ளது. 


Advertisement

image

தாக்குதலுக்கு ஆளான சீக்கியர் அந்த மாநிலத்தில் உள்ள பார்வானி மாவட்டத்தின் புல்சூட் புறக்காவல் நிலையத்தின் அருகே பூட்டு விற்பனை மற்றும் மாற்று சாவி செய்து கொடுக்கும் கடையை நடத்தி வரும் பிரேம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 


Advertisement

50 நொடிகள் ஓடுகின்ற அந்த வீடியோவில் தன்னை விடுமாறு போலீசாரின் கால்களை பிடித்து மன்றாடியுள்ளார். அப்படியிருந்தும் அதனை போலீசார் பொருட்படுத்தாமல் அவரது தலைப்பாகையை கழட்டி, தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து செல்கின்றனர். அதனை தடுக்க வந்த மற்றொரு சீக்கியரையும் போலீசார் தள்ளி விட்டுள்ளனர். 

‘அய்யோ என்னை அடித்து கொடுமை படுத்துகிறார்களே, எங்களை கடை நடத்த விடாமல் செய்கிறார்களே’ என கூட்டமாக நின்று கொண்டிருக்கும் மக்களை பார்த்து காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுள்ளார் பிரேம் சிங். 

image


Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிமிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். அந்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா போலீசார் பிரேம் சிங்கை தாக்கும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளதோடு ‘சீக்கிய சமூகத்தின் உணர்வுகள் சிதைக்கப்பட்டுள்ளன’ எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

‘லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீசார் என்னை தாக்கினார்கள்’ என குற்றம் சாட்டியுள்ளார் பிரேம் சிங். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிரேம் சிங் மற்றும் ஒருவர் டூவீலரில் வந்ததாகவும். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிடத்தில் அவர்களில் ஒருவர் குடிபோதையில் இருத்ததாகவும். அதனால் போலீசார் அவர்களை புறக்காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர்கள் முரண்டு பிடித்ததாகவும் காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement