[X] Close

ஹைதராபாத்தில் மூத்த பத்திரிகையாளருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் - போலீசில் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் மேலவை உறுப்பினரும் (எம்.எல்.சி), அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான கே.நாகேஸ்வர். இவருக்கு இண்டெர்நெட்டிலிருந்து தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்ததாக புகார் அளித்துள்ளார். அவர் ஆன்லனில் பதிவேற்றிய வீடியோக்களுக்காக அவரை கொலை செய்துவிடுவதாக குற்றவாளிகள் மிரட்டியதாகக் கூறியுள்ளார்.


Advertisement

நாகேஸ்வர் பிரபலமான யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பல பிரச்னைகளைக் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இவர் அனுபவமிக்க பத்திரிகையாளர், எழுத்தாளர், தெலுங்கு செய்தி சேனல்களில் ஆய்வாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர்.

மாநில அரசியல் முதல் உலகளாவிய விவகாரங்கள் வரை பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை சேனலில் பகிர்ந்துகொள்கிறார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு முடிவைக் கொண்டுவருவதாக தெரியாத நபர் மிரட்டிய குரலை பதிவிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.


Advertisement

image

ஜூலை 25 அன்று காலை 6.49, காலை 8.59 மற்றும் மதியம் 12.03 மணிக்கு அழைப்புகளும், அது தவிர சில அழைப்புகளும் வந்ததாகவும், கொலை செய்வதாக மிரட்டியதாகவும் அவர் கூறினார். மேலும் அவருடைய கருத்துகள் பிரபலமாவதால் அதை தாங்கமுடியாத யாரோ இதுபோல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கவலைப்படப்போவதில்லை எனவும், நிச்சயமாக இன்னும் அதிகமாக தொடர்ந்து எழுதுவேன், கடுமையாக பேசுவேன் என்றும், காவல்துறையினர் இந்த பிரச்னையை தீவிரமாக கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement

முதலில் ’ஹேக் ஐ’ செயலியில் புகார் அளித்ததாகவும், ஒரு வாரம் ஆகியும் காவல்துறையினர் செயல்படாததால்தான் இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை நாராயணகுடா போலீஸாரை அணுகி, அதிகாரப்பூர்வ புகாரைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement