[X] Close

ஐசியுவில் உயிருக்கு போராடும்,பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி: எய்ம்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 12 வயது டெல்லி சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

image

கடந்த செவ்வாய்கிழமை டெல்லியை சேர்ந்த 12 வயது சிறுமி, பாசிம் விஹார் என்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட இந்த சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார், இவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த சிறுமிக்கு ரத்த தட்டணுக்கள் குறைவாக உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Advertisement

இச்சிறுமியின் உடல்நலம் குறித்து அறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மருத்துவமனைக்கு சென்றார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதியும், நிவாரணமும் கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவன் போதைக்கு அடிமையான நபர் என்றும், தற்போதுதான் ஒரு வழக்கில் ஜாமின் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்தவன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement