'திறமையை நிரூபிக்காவிட்டால், மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’: ஸ்ரீதேவி மகள் ஜான்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜான்வி கபூரின் அடுத்த படமான ’குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்ற படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அவர் முதல் படமான தடாக்கையும் இதே கம்பெனிதான் தயாரித்தது. 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் விமானியாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனாவின் எழுச்சியூட்டும் உண்மை வாழ்க்கைக் கதை படமாக தயாரிக்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.


Advertisement

போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதால் எப்போதும் பொதுமக்களின் கவனத்திலேயே இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதனால் குஞ்சன் சக்சேனாவின் ட்ரெய்லர் வெளியானபோது பலர் வெறுப்பான கருத்துகளை வெளியிட்டனர். படத்தைப் பற்றிய கருத்துகளை விட இந்தி திரையுலகைப் பற்றிய கருத்துகள்தான் அதிகம் இருந்தன.


Advertisement

image

இதுபற்றி தனது கருத்துக்களை வெளியிட்டார் ஜான்வி. மக்களின் உணர்வுகளைக் கருத்தில் எடுத்துக்கொள்வது அவசியம் எனவும், ஒரு நடிகையான தன்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுக்க விரும்புவதாகவும், தனது பெற்றோருக்கு மக்கள் கொடுத்த அன்பை திருப்பித் தர விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருந்தாலும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்கவேண்டும். தனது திறமையை நிரூபிக்காவிட்டால், தன்னை அசாதாரணமானவளாகக் காட்டாவிட்டால் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement