இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல்.ராகுல் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் செர்பியா நாட்டு நடிகை நடாசாவை காதலித்து வந்ததையடுத்து இருவரும் நடுக்கடலில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடாசா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸாடாகிராமில் தெரிவித்திருந்த ஹர்திக் பாண்ட்யா விரைவில் எங்கள் உலகத்தில் இன்னொருவர் இணையப் போகிறார் எனக் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து ஜூலை 30 ஆம் தேதி அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குருணால் பாண்ட்யா குழந்தையை தூக்கிவைத்தவாறு இன்ஸ்டாவில் "கிரிக்கெட் மட்டும் பேசுவோம்" என புகைப்படத்துடன் பகிர்ந்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் "தயவு செய்து வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வர வேண்டும் என குழந்தையிடம் சொல்லுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்