கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடல் நிலை எப்படி இருக்கிறது - நேரடி கள ஆய்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் வுகான் நகரில் உள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் , கொரோனாவிலிருந்து மீண்டு பல மாதங்கள் ஆன போதிலும்,அவர்களுக்கு தற்போதும் நுரையீரல் பாதிப்பு இருப்பதாகவும் அவர்களின் நுரையீரல் செயல்பாடு முன்பு போல முழு திறனுடன் செயல்பட வில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உணவு மற்றும் தட்ப வெப்பநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப அவர்களின் உடல்நிலை மாற வாய்ப்பு இருக்கிறது என்றாலும் இந்தியாவில் அந்நிலைமை எப்படி இருக்கிறது, குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடல்நிலையில் எப்படியான மாற்றங்கள் எழுந்தது என்பதை தெரிந்து கொள்ள கொரோனா வெற்றியாளர்களையே தொடர்பு கொண்டு பேசினோம். 


Advertisement

image

கொரோனாவிலிருந்து மீண்ட காவலர் ஒருவர் கூறும் போது “ உண்மையில் எனது உடல் முன்பு போல இல்லை. முன்பெல்லாம் 300 மீட்டர் மைதானத்தில் 10 சுற்று நடைபயிற்சியும், 10 சுற்று ஓட்டப்பயிற்சியையும் அசாதரணமாக மேற்கொள்வேன். ஆனால் தற்போது அப்படி முடிவதில்லை. கொரோனா வந்த பிறகு மனதளவிலும், நமது உடலை இவ்வளவு ஆரோக்கியமாக பார்த்துக் கொண்ட போதும் கூட நமக்கு கொரோனா வந்து விட்டதே என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. முன்பெல்லாம் பசித்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் தற்போது மூன்று வேளையும் கட்டாய உணவை எடுத்துக் கொள்கிறேன். சக நபர்கள் குறித்த நம்பிக்கையின்மையும் அதிகரித்திருக்கிறது.


Advertisement

மற்றொருவரிடம் கேட்ட போது “ எனக்கு மிகச் சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே இருந்தன. அதனால் என்னை ஒரு வாரம் மட்டும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி விட்டு அனுப்பி விட்டார்கள்.  தற்போது எனக்கு மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி எந்த மாற்றங்களும் இல்லை. என்றார்”

image

மதுரையைச் சேர்ந்த ஒரு செய்தியாளரிடம் கேட்டோம் “ நமது பணி என்பது எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடியப் பணி. அதனால் உடலளவிலும் மனதளவிலும் அதிக ஆற்றல் தேவைப்படும். ஆனால் கொரோனா வந்த பிறகு உடலளவில் ஆற்றல் குறைபாடு இருப்பது போல உணர்கிறேன். 500 மீட்டர் நடந்தாலே உடல் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. மனதளவில் கொரோனா குறித்த விழிப்புணர்வு இருப்பதால், சிலர் அறியாமையால் செய்யும் செயல்களை புரிந்து கொண்டு செயலாற்ற முடிகிறது. என்றார்.


Advertisement

மேலும் பலரிடம் கேட்டோம்” பொதுவான பதில் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றே வந்தது.  சிலர் சொல்வதற்கு தயங்கி மறுப்புத் தெரிவித்து விட்டனர். சிலர் இப்படியொரு போன் கால் வருவதையே விரும்பவில்லை.

 

- கல்யாணி பாண்டியன் 

loading...

Advertisement

Advertisement

Advertisement