நிர்பயா போன்று கொடுமைகளை அனுபவித்த டெல்லி சிறுமி ! டெல்லியை உலுக்கிய சம்பவம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா போல சித்திரவதைகளை அனுபவித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

மேற்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குற்றவாளிகளால் மிகவும் தாக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவத்திற்கு பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிய சூழலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் அடையாளம் கண்டு பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

image


Advertisement

போலீசார் அந்த சிறுமியை மீட்டபோது சுய நினைவின்றி இருந்துள்ளார். அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். அதோடு குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்த்து. இச்சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

இந்நிலையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கிய நபரை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீஸார் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்துள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்களை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, சிறுமியை பாலியவ் வன்கொடுமை செய்தபோது தான் குடித்திருந்தாகவும் கூறியுள்ளார்.

image


Advertisement

மருத்துவமனையின் தகவலின்படி சிறுமியின் உடலை பலமுறை கத்திரியால் குற்றவாளி தாக்கியுள்ளார். மேலும் சிறுமியின் பிறப்பு உறப்பும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது, குடலில் கூட காயங்கள் இருக்கிறது. மேலும் சிறுமியின் தலை மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பலம் போல இந்தச் சிறுமிக்கும் கொடுமை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement