காலில் அடிபட்டு துடிதுடித்த சருகுமான்... மீட்ட கொடைக்கானல் வாகன ஓட்டிகள்...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் அடிபட்ட நிலையில் கிடந்த சருகுமானை மீட்ட சுற்றுலா வாகன ஓட்டிகள்.


Advertisement

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில், சருகுமான் ஒன்று அடிபட்ட நிலையில் தவித்துக் கொண்டிருந்ததை, அவ்வழியாக வந்த உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டிகளான, மோசஸ் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் பார்த்துள்ளனர்.


Advertisement

image
அதன் மீது பரிதாபம் கொண்டு அந்த மானை லாவகமாக பிடித்து, அட்டைப்பெட்டியில் வைத்து பத்திரமாக எடுத்து வந்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். காலில் அடிபட்ட மானை கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்து, முழுவதும் குணமடைந்தவுடன், மீட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement