ரூ.225க்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு - சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள, புனேவை தலைமையிடமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.


Advertisement

இதனையொட்டி 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து தயாரிக்க உள்ளது. பரிசோதனைகளுக்கு பின்னர் அக்டோபர் மாதம் கோவிஷீல்டு தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

imageஇதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC)  கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement