[X] Close

சிறுகுழந்தைகளிடம் அசாதாரண மாற்றம் தெரிகிறதா? - உடனே கவனியுங்க!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

Attention Deficit – Hyperactivity Disorder (ADHD) என்பது சிக்கலான நரம்பியல் வளர்ச்சித் தொடர்பான ஒரு பிரச்னை. இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களிடம் கவனச் சிதறல் மற்றும் அளவுக்கதிகமான மனக்கிளர்ச்சி (யோசிக்காமல் பேசுதல், செயல்படுதல் போன்றவை) போன்ற அறிகுறிகள் தென்படும். இது பெரும்பாலும் சிறுவயதினருக்குத்தான் ஏற்படும். இதற்கு நிரந்தர தீர்வு என்பதைவிட வயதாக வயதாக நேர்மறையான முன்னேற்றம் தெரியும்.


Advertisement


அறிகுறிகள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு ஒரு நேரம் நடந்துகொள்வது போன்று மற்றொரு நேரம் நடந்துகொள்ள முடியாது. ஆனால் ஏடிஹெச்டி பிரச்னை உள்ள குழந்தைகள் வளரும்போதும்கூட சில நேரங்களில் பள்ளி, குடும்பம் மற்றும் நண்பர்களிடம் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ள சிரமப்படுவார்கள்.

 • சுய நடத்தையில் கவனம் செலுத்த முடியாமை
 • அதிக பகல் கனவு காண்பது
 • அதீத ஞாபக மறதி மற்றும் பொருட்களைத் தொலைத்தல்
 • நிம்மதியின்மை அல்லது பதட்ட நிலை
 • அதிகமாகப் பேசுதல்
 • கவனக்குறைவால் தவறிழைத்தல் மற்றும் அபாயகரமான முயற்சி எடுத்தல்
 • சலனங்களை எதிர்கொள்ள முடியாமை
 • மாற்றங்களை எதிர்கொள்வதில் சிரமம்
 • மற்றவர்களுடன் பழகுவதில் சிரமம் காணப்படுதல்

image


Advertisement

வகைகள்

விழிப்பற்ற நிலை: சிலருக்கு ஒரு செயலை ஒழுங்குபடுத்தவோ, குறிப்பிட்ட செயலை செய்துமுடிக்கவோ முடியாது. ஒருவருடைய வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் உரையாடல்களை கவனித்து புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். தினமும் செய்யும் செயல்களையே சரிவர செய்யமுடியாமல் மறந்துபோய் விடுவர்.

ஹைபர் – ஆக்டிவ்: சிலர் தன் மனதிற்குள் என்ன தோன்றுகிறதோ அதை இடம் பொருள் ஏவல் பாராமல் உடனடியாகப் பேசிவிடுவர். மேலும் அளவுக்கதிகமாக பேசுவர். இவர்களால் ஒரு வேலையிலோ ஒரு இடத்திலோ அதிக நேரம் இருக்கமுடியாது. இதனால் அதிக தவறுகளை இழைக்க நேரிடும். சிறுவர்கள் தொடர்ந்து அங்குமிங்கும் அதிகமாக ஓடிக்கொண்டோ, குதித்துக்கொண்டோ இருப்பார்கள். எல்லா விஷயத்தும் அளவுக்கதிகமாக திடீர் திடீரென உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.


Advertisement

image

காரணங்கள்

 • இது பலருக்கும் மரபுரீதியாக வரும் பிரச்னை.
 • தலையில் அடிபடுவதால் கூட வரலாம்.
 • கர்ப்பகாலத்தின்போது திடீரென ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால்கூட குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி பிரச்னை வரும்.
 • மேலும் கர்ப்பகாலத்தின்போது தாயார் போதை மற்றும் மதுவை எடுத்துக்கொள்ளும்போதும் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
 • பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிறத்தல்
 • குழந்தை எடை குறைவாக பிறத்தல்

image

சிகிச்சைகள்: சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்கப் பழகுவதோடு நிதானித்து உள்வாங்கிக் கொள்ள மூளையை பயிற்றுவிக்க வேண்டும்.

நடத்தை தெரபி: சிகிச்சையாளர்கள் மற்றவர்களுடன் பழக, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, செயல்களை திட்டமிட தேவையான பயிற்சிகளை கொடுப்பார்கள்.

பெற்றோர்களுக்கான பயிற்சி: ஏடிஹெச்டியினால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளை எப்படி கையாளுவது, எப்படி அவர்களை மேம்படுத்துவது போன்ற பயிற்சிகளை பெற்றோர்கள் எடுக்கவேண்டும்.

பள்ளி உதவி: குழந்தைகளை கடிந்துகொள்ளாமல் ஆசிரியர்கள் அவர்களை சரியாகக் கையாள வேண்டும்.

இப்படி பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும் குழந்தைகளுக்கு வயதாக ஆக நடத்தையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement