தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை,தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கன மழையும், திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

image


Advertisement

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கூடிய அதிக கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement