“புதிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை” - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிய கல்விக் கொள்கை அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துக்கேட்டு கொண்டுவரப்பட்டதாகவும், அதில் பாகுபாடு ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

டெல்லியில் புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, கல்விக்கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தயாராக வேண்டும் என்றும் கூறினார். அனைத்து தரப்புகளின் கருத்தையும் கேட்ட பிறகே புதிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டதாகவும், அதில் எந்த பாகுபாடும் இல்லை என தெரிவித்தார்.

image


Advertisement

பாடங்களை படிப்பதைவிட, அதுகுறித்த கேள்விகளை கேட்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை, அதற்காகவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி என்றும், கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்த அடைந்துள்ளதாக தெரிவித்துக்கொண்டார்.

“பதவிக்காக திமுக வந்தவன் அல்ல, போராளியாக வந்தவன்” - துரைமுருகன்

loading...

Advertisement

Advertisement

Advertisement