தீயை அணைக்க இனி அதி நவீன ரோபோக்கள் - அசத்தும் மேற்கு வங்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு வங்கத்தில் தீயணைப்புத்துறையினர் நுழைய முடியாத பகுதிகளில் இருக்கும் தீயை அணைப்பதற்கு, புதிய வகை ரோபோக்களை உபயோகப்படுத்துவதற்கான சோதனை  நடைபெற்றது.


Advertisement

தீ விபத்து நடைபெறும் பகுதிகளில், அதிக வெப்பநிலை காரணமாக சில இடங்களில் தீயணைப்புத்துறையினர் நுழைய இயலாது. அது போன்ற பகுதிகளில் உள்ள தீயை அணைப்பதற்கென்றே மேற்கு வங்கத்தில் புதிய வகை ரோபாக்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் சோதனை ஓட்டமானது அங்குள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தில் தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ் உட்பட தீயணைப்புத்துறைச் சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

image


Advertisement

இந்தப் புதிய வகை ரோபோக்கள் குறித்து அமைச்சர் கூறும் போது “ சோதனை நிறைவு பெற்றது. முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும். தீ விபத்து பகுதிகளில் ரோபோக்களை செயல்படும் விதங்களை வேறு ஒரு இடத்தில் இருந்து திரையில் பார்க்கலாம். தீயிக்கு அருகில் 100 மீட்டர் தூரம் வரை இதனால் செல்ல இயலும். இதில் இருக்கும் தண்ணீர்  குழாய்களில் தண்ணீரானது இணைக்கப்படும். அதன் மூலம் தீ விபத்து பகுதிகளில் தண்ணீரானது பீய்ச்சி அடிக்கப்படும். இதில் அதிநவீன பல்புகள் மற்றும் கேமாரக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை வேறு ஒரு பகுதியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கமுடியும்.

image

மேலும் இந்த ரோபோக்கள் 80 -100 அடி உயரம் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் செயல் திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் தாக்குப்பிடிக்கும் இந்த ரோபோக்களில் தெர்மல் வெப்பமானி கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தீ விபத்துப் பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை நாம் அளவீடு செய்து கொள்ள முடியும்.


Advertisement

ரோபோக்களை தவிர்த்து 100 இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் டேங்குகளை பொருத்தி அவற்றை ஆபத்தானப் பகுதிகளில் நாங்கள் உபயோகப்படுத்த உள்ளோம்.” என்றார்

loading...

Advertisement

Advertisement

Advertisement