தினகரனுக்கு எதிராக பேசுவோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுக்க வேண்டும் என்றும் நரசிம்மராவ் போன்று மவுனமாக இருந்தால் வீழ்ச்சி ஏற்படும் எனவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி ஆதரவு கேட்டதாலேயே பாரதிய ஜனதா வேட்பாளருக்கு சசிகலா ஆதரவளித்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் வெற்றிவேல் கூறினார். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ பல்வேறு விவகாரங்களில் அவர் மவுனம் காத்ததே காரணம் என்று கூறிய அவர், தினகரனுக்கு எதிராகப் பேசுவோரை தடுக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தால் வீழ்ச்சியே ஏற்படும் என்றும் கூறினார்.
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!