கோவில்பட்டி: பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்... 2 சிறுவர்கள் காயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் தெற்கு காலனி பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் அதே பகுதியை சேர்ந்த கலையரசன், கருப்பசாமி ஆகிய 2 சிறுவர்கள் காயமடைந்தனர்.image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் தெற்கு காலனியை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் கலையரசன் (12). அதே பகுதியை சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் கருப்பசாமி (11). சிறுவர்கள் இருவரும் இன்று மாலை அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.


Advertisement

இதில் நடந்த சென்ற சிறுவர்கள் இருவரும் லேசான காயமடைந்தனர். பலத்த சத்தத்தை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொது மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

image
இதையடுத்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெடித்து சிதறிய மர்ம பொருளின் துகள்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement