இலங்கை தேர்தலில் முன்னிலை : ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Advertisement

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி வெற்றியை உறுதி செய்யும் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ச வருவது உறுதியாகியுள்ளது. இதனால் ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார்.

image


Advertisement

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த ராஜபக்ச, “போன் மூலம் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி பிரதமர் மோடி அவர்களே. இலங்களை மக்களின் முழு ஆதரவுடன், உங்களுடன் இணைந்து இரு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த நான் இணைந்து செயல்படுவேன். இந்தியாவும், இலங்கையும் நட்பு மற்றும் உறவு நாடுகளாக இருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார்.

இதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நன்றி, உங்களிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது பிரதமர் ராஜபக்ச அவர்களே. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைத்து இடங்களிலும் இருதரப்பு ஒத்துழைப்புடன், முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு புதிய உயரத்தை அடைவோம்” என கூறியுள்ளார்.

தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் : சாதுர்யமாக கண்டுபிடித்த போலீஸ்

loading...

Advertisement

Advertisement

Advertisement