ம.பி சுரங்கத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வைரங்களைக் கண்டுபிடித்த தொழிலாளி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன கதையைக் கேட்டிருக்கிறோம். அதேபோன்ற ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு வைர சுரங்கத்திலிருந்து ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை மதிப்புள்ள மூன்று வைரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தொழிலாளி ஒருவர்.


Advertisement

சுபல் என்ற பெயர் கொண்ட தொழிலாளி ஒருவர் ஆழமற்ற ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது 7.5 காரட் எடையுள்ள மூன்று வைரங்களைக் கண்டுபிடித்ததாக பன்னா மாவட்ட வைர அதிகாரி ஆர்.கே. பாண்டே தெரிவித்தார்.

image


Advertisement

இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் முதல் 35 லட்சம் வரை செல்லும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அரசாங்க விதிகளின்படி அந்த தொழிலாளி கற்களை மாவட்ட வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார். 12 சதவீத வரியைக் கழித்த பின்னர், மீதமுள்ள 88 சதவீத வருமானத்தை தொழிலாளி பெறுவார் என அதிகாரி கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மற்றொரு தொழிலாளி மத்திய பிரதேசத்தின் புத்தேல்கண்ட் பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து 10.69 காரட் எடையுள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement