"கோலியாக இருந்தால் பேசியிருப்பார்கள்.. ஆனால் அவர் பாபர் அசாம்"-நாசர் ஹூசைன் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலியாக இருந்தால் எல்லோரும் பேசியிருப்பார்கள். ஆனால் அவர் பாபர் அசாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் தடைபட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் சேர்த்தபோது ஆட்டமிழந்தார்.

image


Advertisement

இது குறித்து பேசியுள்ள நாசர் ஹூசைன் "விராட் கோலி செய்திருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள். பாபர் அசாம் என்பதால் ஒருவரும் பேசவில்லை.பாபர் அசாம் இளம் வீரர், நேர்தியானவர், அனைத்து ஷாட்டுகள் விளையாடும் ஆக்ரோசத்தையும் பெற்றுள்ளார். இனிமேல் இந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் அல்ல. பாபர் அசாம் உடன் ஐந்து பேர்" என தெரிவித்துள்ளார்.

image

நாசர் ஹூசைன் தெரிவித்த நான்கு பேர் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement