கள்ளக்குறிச்சி அருகே காதல் ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு... போலீஸ் தீவிர விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கள்ளக்குறிச்சி அருகே ஈரியூர் காட்டுப் பகுதியில் உள்ள அருஞ்சோலை அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் இருந்த இரும்புக் கம்பியில் இளம்காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.  தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

image
அம்மன் கோயிலில் ஜோடியாக தூக்கில் தொங்கிய நிலையில், இன்று காலை மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விசாரணையில், இறந்தபெண் நயினார்பாளையம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த 19-வயதான கவிதா என்பதும் இறந்த ஆண் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 19-வயதான பாஸ் (எ) குமார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டாய் அரசு கல்லூரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியாததால் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது.


Advertisement

பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தால் கவிதாவை பார்க்க விரும்பிய குமார், வேலைக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி வந்துள்ளார். வந்த இடத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினாலும், சாவில் சந்தேகம் இருப்பதாக குமாரின் தந்தையும் அவரது சகோதரரும் கூறுகின்றனர்.

image
மேலும் கவிதா இறந்தபோது அவர் கழுத்தில் தாலி இருந்ததால் இருவரும் தாலி கட்டிக் கொண்டு இறந்து விட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி இராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார். மேலும் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் எத்தனை வருட பழக்கம் அல்லது எப்போது திருமணம் நடந்தது என்பது குறித்தும் விசாரணை தொடங்கி உள்ளனர் .ஏனென்றால் இறந்த காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement