ஆதரவற்ற ’வைரல் வீடியோ’ இளைஞர்.. 1 லட்சம் நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிச்சையெடுத்து அதன்மூலம் வந்த நிதியில் டீக்கடை ஆரம்பித்து ஊரடங்கில் ஏழைகளுக்கு உணவு அளித்துவரும் ’வைரல் வீடியோ’ இளைஞருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு லட்சம் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் வந்து பிச்சையெடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டதுபோக மீதியை சேவிங்ஸ் செய்து ஊரடங்குச் சூழலில் நடமாடும் டீக்கடை ஆரம்பித்துள்ளார்.


Advertisement

image

அதில் வந்த வருமானத்தை வைத்து தன்னைப்போலவே ஆதரவற்று உணவில்லாமல் தெருவில் இருக்கும் ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என்று 30 பொட்டலங்களை கொடுப்பதோடு தண்ணீரும் கொடுத்து வருகிறார். இந்த தன்னம்பிக்கை இளைஞரின் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கலங்காதவர்கள் நெஞ்சையும் உருக வைத்தது. 


Advertisement

 

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, இளைஞருக்கு 1 லட்சம் தருவதாக அறிவித்திருக்கிறார். அவரின் ட்விட்டர் பதிவில் ”இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன். யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement