’லிட்டில் பாய்’ அணுகுண்டின் அழியாத சுவடுகள்.. ‘ஹிரோஷிமா’ 75 ஆம் ஆண்டு நினைவு தினம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின்மீது உலகின் முதல் அணுகுண்டு, இதே நாளில்தான் வீசப்பட்டது. கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை நடந்த இரண்டாம் உலகப்போரின்போது, 1945 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 6 இதே நாளில் தான் ‘லிட்டில் பாய்’ என்று பெயரிட்டு அணுகுண்டை வீசியது அமெரிக்கா. இச்சம்பவம் நடந்து 75 ஆண்டுகள் கழிந்தாலும் ஹிரோஷிமா நகரத்தின் சோக வரலாறு மட்டும் இன்னும் வரலாற்றில் அழிக்கப்படவில்லை.


Advertisement

 

image


Advertisement

அணுகுண்டு வீசப்பட்டபோது 50 கிலோ மீட்டருக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஜப்பான் வளர்ந்த நாடாக இருந்தாலும், இன்னும் ஹிரோஷிமாவில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டோடும், புற்றுநோய் உள்ளிட்ட இன்னபிற நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

image

 ஹிரோஷிமா நாகசாகி அழிவிற்குப்பின் சரணடைவதாக ஜப்பான் அறிவித்தவுடன் முடிவுக்கு வந்தது இரண்டாம் உலக்கப்போர். ஆனால், இதற்கு ஜப்பான் கொடுத்த விலை என்பது 2 லட்சம் அப்பாவி மக்களின் உயிர்கள்.


Advertisement

image

ஹிரோஷிமா தினத்தை நினைவுக்கூறவும் அணுகுண்டின் ஆபத்தை உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் உலக மக்களால் ’ஹிரோஷிமா’ தினம் நினைவுக் கூறப்படுகிறது. இந்த அழிவுக்குப்பிறகுதான் 1945 ஆம் ஆண்டு உலகில் சமாதானத்தை ஏற்படுத்தும் விதமாக ஐ.நா சபை உருக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement