[X] Close

அகமதாபாத் மருத்துவமனை தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி: மோடி, அமித்ஷா இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 பேர்  நோயாளிகள் பரிதாபமாக பலியாகினர்.
 
image
 
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து  குஜராத் முதல்வரிடம் பேசியதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
loading...

Advertisement

Advertisement

Advertisement