' திட்டமிட்டு நடித்து அழுததாக அவதூறு' பெண் மீது வழக்குத்தொடுத்த குவாடன் பெய்ல்ஸ்!

Quaden-Bails-sued-for-spreading-slander-

உரயம் குறைவாக இருப்பதைக் காட்டி பள்ளியில் மாணவர்கள் கொடுமைப்படுத்தியதால் “கயிறு கொடுங்கள். நான் சாகப்போக்றேன்” என்று கதறி உலககத்தினரின் அன்பை பெற்ற குவாடன் பெய்ல்ஸ் தற்போது, தன்னை ட்விட்டரில் ’நிதி திரட்டுவதற்காக நடித்தார்’ என்று தவறாக விமர்சித்த பெண் மீது வழக்கு தொடுத்துள்ளார்.  


Advertisement

 

 image


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் நகரத்தைச் சேர்ந்த யாராகா பெய்ல்ஸ் தனது மகன் குவாடன் வளர்ச்சிக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பதால் வகுப்புத் மாணவர்கள் கொடுமைபடுத்துகிறார்கள் என்றுக்கூறி குவாடன் கதறி அழும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.

மேலும், அவர் ‘எனது மகனை துன்புறுத்துவதை நேரடியாகக் கண்டேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்’ என்றார். குவாடன் கதறியழும் வீடியோ உலகம் முழுக்கப் பகிரப்பட்டு அவருக்கு ஆதரவையும் புகழையும் கொடுத்தது. அவருக்கு பெரிய நிதியுதவியையும் அளித்தது.

image


Advertisement

 இந்நிலையில். ஆஸ்திரேலிய கட்டுரையாளர் மிராண்டா  என்பவர் குவாடனுக்கு அடுத்தடுத்து நிதியுதவி கிடைப்பதை விமர்சித்து ”குவாடன் திட்டமிட்டு நடித்து அழுதுள்ளார். அதற்கான பயிற்சியை அளித்தது அவரது தாய்தான்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த குவாடனின் குடும்பத்தினர் மிராண்டா  பணிபுரியும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா ஊடகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

image

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement