ஆஸ்திரியாவில் இருந்து 8 பேர் கொண்ட குழு ஜூலை 31ஆம் தேதி இத்தாலி நாட்டின் ஜிப்சோடெகா அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளது. அங்கு அன்டோனியா கனோவாவின் பவுலினா போனபார்டே சிலைமீது அமர்ந்து புகைப்படம் எடுக்க தங்கள் குழுவினரிடமிருந்து பிரிந்து ஒருவர் மட்டும் சென்றுள்ளார். அவர் மேலே அமர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு கீழே குதித்தபோது சிலையின் கால்விரல்கள் உடைந்துவிட்டது.
உடனே சுற்றுலாப் பயணி யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து விரைவாக நகர முற்பட்டார். அறையில் ஒரு அலாரம் அணைந்த பின்னர் ஊழியர்கள் சிலை சேதமடைந்ததைக் கண்டறிந்துள்ளனர். அந்த நபர் தன்னுடன் கொண்டு சென்றிருந்த கொரோனா சோதனை முடிவு அறிக்கையை அருங்காட்சியகத்திலேயே விட்டுச் சென்றிருக்கிறார். அதை வைத்து போலீஸார் அந்த நபரைக் கண்டுபிடித்தனர்.
விசாரித்தபோது அந்த நபர்தான் சிலையை உடைத்ததாக ஒத்துக்கொண்டார். இதுகுறித்து அருங்காட்சியகத்தின் இயக்குநர், சிற்பத்தின் உடைந்த துண்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!