விழுப்புரத்தில் வரதட்சணை கேட்டு காதல் மனைவி மீது கணவரே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த வானூர் பரங்கனியை சேர்ந்த ஜீவா என்பவர் நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜீன் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து காதல் மனைவியிடம் வரதட்சணையாக நகை, பணம் உள்ளிட்டவற்றை வீட்டிற்கு சென்று வாங்கி வருமாறு ஜீவா அடிக்கடி தகாராறு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு கணவன் - மனைவிக்குள் வரதட்சணை தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜூவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, மனைவி தன்மீது தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராஜேஸ்வரி தனது கணவர் தன்னிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு சண்டையிட்டு பெற்றோர்களிடத்தில் நகை வாங்கி வர சொல்லிவந்ததாகவும், கடந்த மூன்றாம் தேதி நடந்த சண்டையில் தன் மீது மண்ணென்னைய் ஊற்றி கொளுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதுதொடர்பாக வீட்டில் சொன்னால் தனது தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஜீவாவை வானூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள ராஜேஸ்வரிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?