ஃபார்வேர்ட் மெசேஜ்களின் உண்மைத் தன்மையை அறியும் விதமாகவும் புது அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.
இணைய வாசிகள் தவிர்க்க முடியாத அப்ளிகேஷன் என்றால் அது வாட்ஸ் அப் தான். நண்பர்கள், உறவுகள், அலுவலக தொடர்புகள், தொழில் வாய்ப்புகள் என அனைத்திற்கும் எல்லோருமே வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதில் குழுவாகவும், தனி நபராகவும் சேட் செய்யும் வசதி உள்ளது. இருந்தாலும் சமயங்களில் வேண்டாத ஃபார்வேர்ட் மெசேஜ்களை தனியாகவும், குழுவிலும் பகிரப்படுகின்றன.
உண்மைத்தன்மை அறியாமல் அனுப்பப்படும் ஃபார்வேர்ட் மெசேஜ்களால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல முயற்சிகளை கையாண்டது. ஃபார்வேர்ட் மெசேஜ்களை 5 நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அறிவித்தது. இப்படி போலி செய்திகள் ஃபார்வேர்ட் மெசேஜ்களாக பரவுவதை தடுக்கும் விதமாகவும் அதன் உண்மைத் தன்மையை அறியும் விதமாகவும் புது அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது. “search the web” என்ற அப்டேட்டின்படி ஃபார்வேர்ட் மெசேஜ்களுக்கு அருகிலேயே செர்ச் ஆப்ஷன் இருக்கும்.
நேரடியாக கூகுளுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஷன் மூலம் சம்பந்தப்பட்ட ஃபார்வேர்ட் மெசேஜின் உண்மைத் தன்மை என்ன என்பதை கூகுளில் இருந்து உடனடியாக பெறலாம். இந்த அப்டேட் பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்